சென்னை அணியின் புதிய ஜெர்சி.. பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து உருவாக்கப்பட்டதாம்!

Default Image

2021-ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புதிய ஜெர்சியை அணிந்து விளையாடவுள்ளது. இந்த புதிய ஜெர்சியை தல தோனி அறிமுகப்படுத்தினார்.

2021-ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த போட்டி, சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மைதானங்களில் தலா 10 போட்டிகளும், அகமதாபாத் மற்றும் டெல்லி மைதானத்தில் தலா 8 போட்டிகளும் நடைபெறவுள்ளது. அதனைதொடர்ந்து இறுதிப்போட்டி மற்றும் பிளேஆஃப் சுற்று, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த ஐபிஎல் வரலாற்றில் சோகமான செய்தி என்னவென்றால், எந்த அணியும் தங்கள் சொந்த மைதானத்தில் விளையாடவில்லை. இதனால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். தங்களின் அணியுடன் இணைந்த வீரர்கள், பயிற்சியில் ஈடுபட தொடங்கினார்கள். அந்தவகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புதிய ஜெர்சியை அணிந்து விளையாடவுள்ளது. இந்த புதிய ஜெர்சியை தல தோனி அறிமுகப்படுத்தினார். ஐபிஎல் தொடங்கிய 2008 ஆம் ஆண்டுமுதல் சென்னை அணி ஒரே மாதிரியான ஜெர்சியை அணிந்து விளையாடி வந்த நிலையில், முதல் முறையாக அதன் வடிவமைப்பில் மாற்றம் செய்துள்ளது.

இந்த ஜெர்சியின் சிறப்பம்சம் என்னவென்றால், பிளாஸ்டிக் பாட்டிலை மறுசுழற்சி செய்து உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு ஜெர்சி, 15 பிளாஸ்டிக் பாட்டிலை மறுசுழற்சி செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ராணுவ வீரர்களை கவுரவிக்கும் வகையில் ராணுவ சீருடைக்குரிய நிறம் இந்த ஜெர்சியின் தோள்பட்டை பகுதியில் இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 3 முறை கோப்பையை கைப்பற்றியதால், ஜெர்சியில் 3 ஸ்டார்கள் இடம்பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்