#BREAKING: தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதிக்கு கொரோனா..!
தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவரின் பரிந்துரை பெயரில் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். தீவிரம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த பார்த்தசாரதிக்கு நேற்று மாலை உடல்நிலை குறைவு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியது. ஏற்கனவே சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், எல்.கே.சுதீஷ் ஆகியோருக்கு தொற்று உறுதியான நிலையில் தற்போது மேலும் ஒரு தேமுதிக நிர்வாகிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.