இந்த தேர்தலில் வெற்றி இவர்களுக்கு தான்…! டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பில் வெளியான தகவல்….!
சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.
இந்த சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என பல கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.
அந்த கருத்துக் கணிப்பின் படி, காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள 41 தொகுதிகளில் திமுக 31 இடங்களை கைப்பற்றும் என்றும், அதிமுக கூட்டணி தொகுதிகளிலும், அ.ம.மு.க ஒரு தொகுதியிலும் வெற்றி பெரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 16 தொகுதிகளில் திமுக 11 தொகுதிகளிலும், அதிமுக 4 இடங்களிலும், வெற்றி பெறும் என்றும் கருத்துக் கணிப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், தமிழகத்தில் உள்ள மொத்தம் 234 தொகுதிகளில், திமுக 177 இடங்களிலும், அதிமுக 49 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.