ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆஜராக உத்தரவு..!
ஏப்ரல் 7-ஆம் தேதி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆஜராக டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் ஏப்ரல் 7-ஆம் தேதி ஆஜராக டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அடிப்படையில் டெல்லி சிறப்பு நீதிமன்றம் இந்த சம்மன் அனுப்பியுள்ளது.