#BREAKING: கோவை ஆட்சியர், காவல் ஆணையர் திடீர் இடமாற்றம்.! புதிய அதிகாரிகள் நியமனம்.!

கோவை மாவட்டம் ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் ஆகியோரை இடமாற்றம் செய்து புதிய அதிகாரிகளை நியமித்த தேர்தல் ஆணையம்.

கோவை மாவட்டம் ஆட்சியர் ராசாமணி, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆட்சியர் ராசாமணி, ஆணையர் சுமித்சரணை தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆளும்கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த புகாரில் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு வந்த பல்வேறு தகவல்களின் அடிப்படையில் இருவரையும் தேர்தல் அல்லாத பணிக்கு இடமாற்றம் செய்ததாக தகவல் கூறப்படுகிறது.

இதையடுத்து கோவை மாவட்டம் புதிய ஆட்சியராக எஸ்.நாகராஜன், காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, கோயம்பத்தூரில் 365 புகார்களில், 284 புகார்கள் உண்மைத்தன்மை கண்டறியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்