வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்கள் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்தது எப்படி? – உயர்நீதிமன்றம்
வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்கள் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்தது எப்படி? என்று தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.
வாக்காளரின் செல்போன் எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் அரசியல் கட்சிகளுக்கு கிடைப்பதை தடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்கள் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்தது எப்படி? என்று தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாஜகவில் சேறுமாறும், வாக்களிக்குமாறும் குறுந்தகவல் வருவதாக புதுச்சேரியை சேர்ந்த ஆனந்த் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அதிருப்தி அடைந்த நீதிமன்றம், வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்கள் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்தது எப்படி? என்று கேள்வி எழுப்பி, இதுதொடர்பாக வரும் 26ம் தேதி தேர்தல் ஆணையம் பதில் தர வேண்டும் என்று வழக்கை ஒத்துவைத்தனர்.