சூர்யா 40 படத்தின் அட்டகாசமான லேட்டஸ்ட் அப்டேட்…!!

சூர்யா 40 டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தகவல்.
நடிகர் சூர்யா சூரரைப்போற்று வெற்றியை தொடர்ந்து அடுத்தாக தனது 40 வது திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துவருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த மாதம் இறுதியில் மொத்த படத்தின் படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம். அதைபோல் படத்திற்கான டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.