தேர்தல் அறிக்கைகளை ஆராய, ஆணையத்திற்கு உத்தரவு – உயர்நீதிமன்றம்
தேர்தல் அறிக்கைகளை ஆராய, தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் தேர்தல் ஆணைய விதிகளுக்கு உட்பட்டு வெளியிடப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பி, தேர்தல் முடிந்த 2 மாதத்திற்குள் தேர்தல் அறிக்கை பற்றி ஆராய்ந்து ஆணையம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் அறிக்கை நடத்தை விதிக்கு உட்பட்டு உள்ளதா என ஆய்வு செய்ய கடந்த 20213ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று மனுதாரர் தெரிவித்த நிலையில், தேர்தல் அறிக்கையை ஆராய கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.