வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..??

வாடிவாசல் படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்படவுள்ளதாக தகவல்.
நடிகர் சூர்யா தற்போது சூரரைப்போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் தனது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அருவா, மற்றும் வாடிவாசல் ஆகிய இரண்டு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் அருவா படத்தில் அடுத்ததாக நடிக்க வாய்ப்பில்லை ஏனெனில் இயக்குனர் ஹரி நடிகர் அருண் விஜய்யை வைத்து திரைப்படம் இயக்கி வருவதால் அடுத்த ஆண்டு அருவா படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது 40 வது திரைப்படத்திற்கான படப்பிடிப்பை 3 மாதங்களிற்குள் முடித்துவிட்டு வாடிவாசல் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். அதன் படி செப்டம்பரில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதனால் தற்போது சூர்யா ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் உள்ளார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024