கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒவைசி…!

அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி 16-ம் தேதி தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது. மார்ச்-1ம் தேதி முதல் 60 வயத்திற்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில், பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல தலைவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், இன்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.