ஒரேயடியாக அதிமுகவில் இருந்து மூன்று பேர் நீக்கம் – ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை
கட்சிக்கு முரணான வகையில் செயல்பட்டதால் மூன்று பேரை அதிமுகவில் இருந்து நீக்கி முதல்வர், துணை முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கொள்கை, குறிக்கோளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத்தொகுதில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ள காரணத்தாலும்,
மதுரை மாநகர் மாவட்டத்தை சேர்ந்த ச.கிரம்மர் சுரேஷ், புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தை சேர்ந்த சி.அழகுசுப்பையா மற்றும் விருதுநகர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த கோகுலம் எம்.தங்கராஜ் ஆகிய மூன்று பேரும் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளனர். மேலும் கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/dZHNcN3yZa
— AIADMK (@AIADMKOfficial) March 22, 2021