உங்கள் வீட்டில் நியூஸ் பேப்பர் வாங்கும் பழக்கம் உள்ளதா…? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்…!
நியூஸ் பேப்பரை, நாம் எவ்வாறு வீட்டு பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தலாம்.
வீட்டில் சிலர் நியூஸ் பேப்பர் வாங்கும் பழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளனர். இவர்கள் இதை மொத்தமாக சேர்த்து வைத்து, கடைகளில் விற்பனை செய்வது உண்டு. ஆனால், அதை அவ்வாறு செய்யாமல், நாம் எவ்வாறு வீட்டு பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தலாம் என்பது குறித்து பார்ப்போம்.
உங்களது வீட்டில் கண்ணாடி பொருட்கள் காணப்பட்டால், அவற்றை நன்கு சுத்தமாக அழுக்கு இல்லாமல் அழகாக பராமரிப்பதற்கு நியூஸ் பேப்பரை பயன்படுத்தலாம். இவ்வாறு பயன்படுத்தினால் கண்ணாடி பொருட்கள் பளபளப்பாக காணப்படும்.
நாம் வாங்குகின்ற காய்கறிகள் அனைத்தையும் உடனடியாக சமையல் செய்வது இல்லை. எனவே, காய்கறிகள் நீண்ட நாட்கள் வாடி போகாமல் இருக்க, அதனை நியூஸ் பேப்பரால் சுற்றி விட்டால், வாடி போகாமல் இருக்கும்.
வீடுகளின் ஷெல்ப் நியூஸ் பேப்பரை விரித்து வைத்தால், அதில், ஒரு கரையும் படியாமல் தூய்மையாக இருக்கும். கிச்சன், புத்தக அறை மற்றும் அவற்றின் அடியில் பேப்பரை விரித்து பொருட்களை வைத்தால், பார்ப்பதற்கு அழகாகவும் தூய்மையாகவும் காணப்படும்.
வீடுகளை அலங்கரிக்க நியூஸ் பேப்பரில் பூக்களை செய்து, ஷோகேஸில் வைக்கும் போது, அழகாக இருக்கும். தோட்டத்தில் விதைகளை விதைத்து செடி வைக்க வேண்டுமென்று விரும்பினால், அந்த விதைகளை ஒரு ஈரமான பேப்பரால் சுற்றி இரண்டு வாரம் வைத்து எடுத்து பார்த்தால், அது முளை கட்டியிருக்கும். முளைகட்டிய விதைகளை பின் விதைத்தால் செடி நன்கு வளரும்.