திமுக என்றால் திருடர்கள் முன்னேற்ற கழகம் – நடிகை விந்தியா பேச்சு ..!
ஒவ்வொரு குடிமகனுக்கும் தெரியும் திமுக என்றால் திருடர்கள் முன்னேற்ற கழகம் , திமிர்பிடித்தவர்கள் முன்னேற்ற கழகம் என நடிகை விந்தியா கூறினார்.
உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளராக பி. அய்யப்பன் போட்டியிடயுள்ளார். அவரை ஆதரித்து உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் நடிகை விந்தியா மற்றும் அமைச்சா் ஆா்.பி. உதயக்குமாா் ஆகியோா் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
அப்போது பேசிய நடிகை விந்தியா, உங்கள் கையில் செல்போன் வைத்து உள்ளீர்கள், கூகிளில் சென்று DMK என தயவு செய்து தேடிப்பாருங்கள்; கூகிளில் DMK என தேடிப்பார்த்தால் ஒரு பட்டியல் வரும், DMK attack பியூட்டி பார்லர், DMK attack பிரியாணி shop, DMK attack BJP office, DMK attack Police Station என ஒரு பட்டியல் வரும் அதை பார்க்கவேண்டும்.
ஒவ்வொரு குடிமகனுக்கும் தெரியும் திமுக என்றால் திருடர்கள் முன்னேற்ற கழகம் , திமிர்பிடித்தவர்கள் முன்னேற்ற கழகம் என கூறினார். தொடர்ந்து பேசிய நடிகை விந்தியா தேர்தல் வந்தால் போதும் ஸ்டாலின் புறப்பட்டு விடுவார் வேஷம் போட்டுக்கொண்டு பாட்டாளி, பங்காளி, நாட்டாமை, மீனவர் வேஷம் போட்டு பிரச்சாரம் செய்வார்.
சைக்கிள், ஆட்டோ, பைக், லாரி , பஸ் ஓட்டுவார் விட்டால் பூசாரி வேஷம் போட்டு போய் ஓட்டுவார் என கூறினார். தயவு செய்து அவர்களை நம்பாதீர்கள். தேர்தல் வந்தால் பொய்யான வாக்குறுதிகளை திமுக சொல்லுவார்கள் என கூறினார்.