முடிவில் பயத்தையும் பதட்டத்தையும் தந்தும் அனுப்புகிறார் கர்ணனாக…!
கர்ணன் படத்தின் டீசரை பார்த்த இயக்குனர் சுப்பிரமணிய சிவா தனது ட்வீட்டர் பக்கத்தில் புகழந்து கூறியுள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்திலிருந்து வெளியான அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து நாளை இரவு 7.01 மணிக்கு படத்திற்கான டீசர் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் தற்போது அந்த டீசரை பார்த்த பிரபல இயக்குனரான சுப்பிரமணிய சிவா தனது ட்வீட்டர் பக்கத்தில் ” எச்சரிக்கையாக இருங்கள்! நேற்றும் கர்ணன் டீசர் பார்த்தேன். குலை நடுங்க வைக்கிறார் மாரி செல்வராஜ். தனுஷ் என்ற அசுரன் எதிரியாக நினைப்பவர்களும் கொண்டாடிதான் ஆக வேண்டும் என திரும்பவும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து, முடிவில் பயத்தையும் பதட்டத்தையும் தந்தும் அனுப்புகிறார் கர்ணனாக ” என்று ட்வீட் செய்துள்ளார்.
எச்சரிக்கையாக இருங்கள்!
நேற்றும் #KarnanTeaser பார்த்தேன்.
குலை நடுங்க வைக்கிறார் @mari_selvaraj.
தனுஷ் என்ற அசுரன்
எதிரியாக
நினைப்பவர்களும்
கொண்டாடிதான் ஆக
வேண்டும் என திரும்பவும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து,
முடிவில் பயத்தையும் பதட்டத்தையும் தந்தும் அனுப்புகிறார் கர்ணனாக!— Subramaniam Shiva (@DirectorS_Shiva) March 22, 2021