உண்டியல் பணம் எண்ணும் பணியின் முதல் நாளில் பழனி முருகன் கோவில் காணிக்கை 2 கோடி ரூபாயை தாண்டியது!
உண்டியல் பணம் எண்ணும் பணியின் முதல் நாளில் பழனி முருகன் கோவில் காணிக்கை 2 கோடி ரூபாயை தாண்டியது. பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பழனி கோவில் உண்டியல்கள் 21 நாட்களில் நிறைந்தன.
இதை அடுத்து உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கப்பட்டு, கோவில் அலுவலர்கள், பள்ளி மாணவிகள் என ஏராளமானோர் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முதல் நாளில் இரண்டு கோடியே 7 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் காணிக்கை பணம் எண்ணப்பட்டது.
ஒரு கிலோ தங்கத்தினாலான பொருட்கள், 9 கிலோ வெள்ளிப் பொருட்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், கரன்சிகளும் உண்டியல்களில் இருந்தன. உண்டியல் பணம் எண்ணும் பணி இன்றும் தொடர்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.