தோனி நா சும்மாவா.. பயிற்சியிலே வானத்தை நோக்கி பாய்ந்த பந்து.. 114 மீட்டராம்!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டுவரும் தல தோனி, 109 மற்றும் 114 மீட்டர் தூரத்திற்கு பந்துகளை சிக்ஸர் லைன் நோக்கி பறக்கவிட்டார்.
2021-ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மைதானங்களில் தலா 10 போட்டிகளும், அகமதாபாத் மற்றும் டெல்லி மைதானத்தில் தலா 8 போட்டிகளும் நடைபெறவுள்ளது. அதனைதொடர்ந்து இறுதிப்போட்டி மற்றும் பிளேஆஃப் சுற்று, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த ஐபிஎல் வரலாற்றில் சோகமான செய்தி என்னவென்றால், எந்த அணியும் தங்கள் சொந்த மைதானத்தில் விளையாடவில்லை. இதனால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். தங்களின் அணியுடன் இணைந்த வீரர்கள், பயிற்சியில் ஈடுபட தொடங்கினார்கள். அந்தவகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி, வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று அவர் பயிற்சி மேற்கொள்ளும்போது 109 மற்றும் 114 மீட்டர் தூரத்திற்கு பந்துகளை சிக்ஸர் லைன் நோக்கி பறக்கவிட்டார். இதுகுறித்த விடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டது. தற்பொழுது இந்த வீடியோ, சமூகவலைத்தளங்களில் அதிகளவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், தல தோனி நா சும்மாவா என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Let the whistles travel for 109, 114,……… metres! #WhistlePodu #Yellove ???????? @msdhoni pic.twitter.com/J7nExa0vVT
— Chennai Super Kings (@ChennaiIPL) March 20, 2021