மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் காரை குடிபோதையில் பின் தொடர்ந்த விவகாரம் !மாணவர்கள் 4 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

Default Image

குடிபோதையில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் காரை  பின் தொடர்ந்த  டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேர் மீது போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஏப்ரலில், விமான நிலையத்தில் இருந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஸ்மிருதி இராணியை பின் தொடர்ந்ததாக டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேர் மீது, பின் தொடர்தல் மற்றும் பெண்களை இழிவுபடுத்துதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் சாணக்யாபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அந்த 4 மாணவர்களும் குடிபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வழக்குப்பதிவுக்குப் பின்னர் 4 பேரும் ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு எதிராக தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்