எப்போ வரனும்னு மட்டும் சொல்லுங்கண்ணே ஓடியாந்துடுறேன் – சூரி..!
சூர்யா 40 புகைப்படமே மிரட்டலா இருக்குதுணே எப்போ வரனும்னு மட்டும் சொல்லுங்கண்ணே ஓடியாந்துடுறேன் என்று சூரி ட்வீட் செய்துள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் சூர்யா 40. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்ற 40 பிரபலங்கள் நடிக்கவுள்ளனர். குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படத்திற்கான டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி இயக்குனர் பாண்டிராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் சூர்யா 40 படத்திற்கான படப்பிடிப்பு நன்றாக நடைபெற்று வருவதாக கூறியிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது படத்தில் நடிக்கும் சூரி தனது ட்வீட்டர் பக்கத்தில் “புகைப்படமே மிரட்டலா இருக்குதுணே எப்போ வரனும்னு மட்டும் சொல்லுங்கண்ணே ஓடியாந்துடுறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Photoவே மிரட்டலா இருக்குதுணே????????????
எப்போ வரனும்னு மட்டும் சொல்லுங்கண்ணே ஓடியாந்துடுறேன் ???????????? #suriya40 @pandiraj_dir @sunpictures @Suriya_offl @immancomposer https://t.co/Wd8yS6In9D— Actor Soori (@sooriofficial) March 20, 2021