#Whatsapp:45 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த வாட்சப் ,இன்ஸ்டாகிராம்
உலகம் முழுவதும் அதிக பயனர்களால் பயன்படுத்தப்படும் பேஸ்புக் க்கு சொந்தமான மெசேஞ்சர், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை அரை மணி நேரத்திற்கு மேலாக உலகம் முழுவதும் முடங்கியது.
தடை ஏற்பட்டவுடன் பயனர்கள் ட்விட்டரில் ட்வீட் செய்ய ஆரம்பித்தனர் தங்களுக்கு வாட்ஸ் அப் இன்ஸ்டாகிராம் மெசேஞ்சர் ஆகியவைகள் முற்றிலுமாக தடை பட்டுள்ளதாகவும்,எந்தவித செய்திகள் மற்றும் புகைப்படம் வீடியோக்களை பகிர முடியாமல் உள்ளதாக ட்வீட் செய்தனர்.
45 நிமிடங்கள் நீடித்த இந்தக் குறைபாடானது சரி செய்யப்பட்டுள்ளது.ஆனாலும் ஏன் இந்த இடையூறு ஏற்பட்டது என்று குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.இது குறித்து ட்வீட் செய்துள்ள வாட்ஸப் நிறுவனம் கடந்த 45 நிமிடங்களாக பொறுமையுடன் இருந்தமைக்கு மிக்க நன்றி என பதிவு செய்துள்ளது.
Thanks for your patience, that was a long 45 minutes but we are back! #WhatsAppDown
— WhatsApp (@WhatsApp) March 19, 2021