வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட என்.ஆர் காங்கிரஸ்..!
வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. வேட்பாளர்களை முன்கூட்டி அறிவிக்காமல் வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடம் வேட்பாளர் பட்டியலை என்.ஆர் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் மொத்தமுள்ள 30 தொகுதியில் 16 தொகுதியில் போட்டிடவுள்ளது. இந்த தேர்தலில் யார் யார் என்.ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டிடவுள்ளனர் என்பது தெரியாமல் இருந்தநிலையில், சற்று நேரத்த்திற்கு முன் என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வெளியிட்டார்.