#ElectionBreaking: மக்கள் கேண்டீன் திட்டம்., தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மக்கள் நீதி மய்யம்.!
அனைத்து பொருட்களும் விலை மலிவாக மக்களுக்கு கிடைக்கும் வகையில் ‘மக்கள் கேண்டீன்’ திட்டம் அமைக்கப்படும் என ம.நீ.ம தேர்தல் அறிக்கை.
மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று காலை வெளியிட்டிருந்தார். அதில், வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழகத்தை உருவாக்க 18 திட்டங்களை கொண்ட மக்களாட்சி, அறிவார்ந்த அரசியல், சமூக நீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி ஆகியவற்றை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையை வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் முழுமையான தேர்தல் அறிக்கையை கோவையில் செய்தியாளர்களை சந்தித்து கமல்ஹாசன்தற்போது வெளியிட்டுள்ளார். அதில், ராணுவ கேண்டீன் போல, அனைத்து பொருட்களும் விலை மலிவாக மக்களுக்கு கிடைக்கும் வகையில் ‘மக்கள் கேண்டீன்’ என்ற திட்டம் அமைக்கப்படும். ம.நீ.ம தேர்தல் அறிக்கை தனித்துவமானது, எங்களுக்கு நம்பிக்கை வந்த பிறகே, தேர்தல் அறிக்கையை கொடுத்துள்ளோம் என கூறியுள்ளார்.
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000, ரூ.1500 உதவித்தொகை எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்கிறார்கள் என்று அறிக்கை வெளியீட்டின்போது திமுக அதிமுகவுக்கு கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். பெண்களுக்கு ஊதியம் என்பது வேலை வாய்ப்பை உருவாக்குவது; இலவசம் வழங்குவது அல்ல, நிறைவேற்றக்கூடிய திட்டங்களை தான் வாக்குறுதிகளாக அறிவிக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
6 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை உள்ள நிலையில், இலவசங்களை அறிவித்தால் கூடுதல் ஏற்படும். வாசிங்மிஷின் கொடுத்து அதன் பில் மக்கள் தலையிலேயே ஏற்றப்படுகிறது. இல்லத்தரசிகளின் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்றும் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அப்துல் கலாம் தற்சார்பு கிராமங்கள் உருவாக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகிறார். #கோவையில்_கமல் #கோவை_தெற்கில்_நம்மவர் #கோவையும்_நமதே_கோட்டையும்_நமதே #நம்ம_சின்னம்_டார்ச்_லைட் #டார்ச்லைட்_சின்னத்திற்கு_வாக் https://t.co/7bpFga8AOE
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 19, 2021