2-வது ‘டோஸ்’க்கு வராத ஒரு லட்சம் பேர்..!

முதல் டோஸ் போட்டுக்கொண்டவர்களில் ஒரு லட்சம் பேர் 2-வது டோஸ் செலுத்த வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதனால், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்ட பின்னர் 28 நாட்கள் கழித்து 2-வது டோஸ் செலுத்தவேண்டும்.
இந்நிலையில், தமிழகத்தில் 4 வாரங்களுக்கு முன் 2.46 பேர் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் எடுத்துக்கொண்டனர். ஆனால், தற்போது கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்டவர்களில் 1.43 லட்சம் பேர் மட்டுமே 2-வது டோஸ் எடுத்துக்கொண்டனர். முதல் டோஸ் போட்டுக்கொண்டவர்களில் ஒரு லட்சம் பேர் 2-வது டோஸ் செலுத்த வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025