இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப்படங்கள்..!!

Default Image

இந்த வருடம் வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த 5 தமிழ் திரைப்படங்களை பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு பல திரைப்படங்கள் ஓடிடி இணையத்தளத்தில் வெளியானது. அதற்கு பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் 50 % இருக்கைகளுடன் திறக்கப்பட்டு சில படங்கள் வெளியானது, வெளியானதில் ஒரு திரைப்படம் கூட நல்ல வசூல் கொடுக்கவில்லை.

இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் தேதி  மாஸ்டர் படம் வெளியாகி ரசிகர்களுக்கும் சினிமா திரைக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது என்ற கூறலாம். இந்த படம் திரையரங்கு உரிமையாளர்களுக்கும், விநியோகதஸ்தர்களுக்கும் லாபத்தை கொடுத்தது இதனால் விஜய்யை வசூல் சர்க்ரவர்த்தி என்று அழைத்தனர். இதுமட்டுமின்றி மாஸ்டர் படம் வசூலில் பல சாதனைகளை படைத்துள்ளது. ஆம் இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் முதலிடத்தில் மாஸ்டர் படம் தான் உள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த 5 படங்களின் பட்டியலை குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆம் இதில் முதலிடத்தில் மாஸ்டர் திரைப்படம் 222.75 கோடி வசூல் செய்துள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் வெளியான சக்ரா திரைப்படம் 18.8 கோடி வசூல் செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது. அடுத்ததாக சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் 9.4 கோடி வசூல் செய்து மூன்றாவது இடத்தில் உள்ளது. அடுத்ததாக எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் 6.65 கோடி வசூல் செய்து நான்காவது இடத்தில் உள்ளது. அடுத்ததாக சந்தானம் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் 5.1 கோடி வசூல் செய்து ஐந்தாவது இடத்தில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
KKR VS LSG IPL 2025
Free bus for men - Minister Sivasankar says
Rajat Patidar fined
Governor RN Ravi - Supreme court of India - TN CM MK Stalin
AA22xA6