#ElectionBreaking: “வாக்காளர் பாதுகாப்பை உறுதிப்படுத்துக”- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து வேட்பாளர்கள், வேட்புமனுக்களை தாக்கல் செய்து, பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கருங்குளத்தில் பட்டியலின மக்களுக்கு தனி வாக்குச்சாவடி அமைக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் அதிகாரியிடமும், மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு மனுகுடுத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

அந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி, வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையத்திற்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.