பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் களமிறங்கும் பிரதமர் உள்ளிட்ட 30 பேர் கொண்ட குழு..!

Default Image

தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் பாஜக தலைவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனால், அனைத்து கட்சியினர் தங்களது கூட்டணி தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியலை அறிவித்தனர். இதைத்தொடர்ந்து, தற்போது வேட்புமனு தாக்கல் பணி மும்பரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த 15ஆம் தேதி முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின், சீமான், டி.டி.வி தினகரன், கமல், வானதி சீனிவாசன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிடோர் வேட்புமனு தாக்கல் செய்து தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் என்பதால் போட்டியிடம் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு 20 தொகுதிகள் மற்றும்  இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியும்  ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலுக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் பாஜக தலைவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அந்த பட்டியலில் பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி , நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், ஸ்மிருதி ராணி, யோகி ஆதித்யநாத், சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட 30 பேர் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுப்படுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்