#BREAKING: சாத்தான்குளம் வழக்கு .., 6 மாதம் கெடு..!
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்கவேண்டும் என மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோா் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்பட 10 காவலா்கள் கைது செய்யப்பட்டு தற்போது மதுரை மத்திய சிறையில் உள்ளனர். இவர்களில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தார். இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்கவேண்டும் என மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை ஜெயராஜின் மனைவி செல்வராணி தொடர்ந்த வழக்கில் மதுரை கிளை பிறப்பித்துள்ளது.