அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு.! வேட்புமனுவில் வெளிவந்த விவரம்.!
கடந்த 5 ஆண்டுகளில் அமைச்சர் விஜேபாஸ்கரின் சொத்து மதிப்பு 6.5 மடங்கு அதிகரித்து உள்ளது என்பது வேட்புமனு மூலம் தெரியவந்துள்ளது.
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் 234 தொகுதிகளிலும் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், பலரும் தங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். இந்த வேட்புமனு தாக்கலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை குறிப்பிட வேண்டும்.
இதனால் தங்கள் தொகுதிகளிலில் போட்டியிடும் சொத்து மதிப்பு விவரங்கள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அந்தவகையில் தற்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்து குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. விராலிமலை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று வருவாய் கோட்ட அலுவல அதிகாரியிடம் தனது வேட்புமனு தாக்கல் செய்தார்.
அப்போது, அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு பலமடங்கு உயர்த்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது, கடந்த 2016ம் ஆண்டில் அசையும் சொத்து மதிப்பு ரூ.6.24 கோடியும், 2021ம் ஆண்டில் ரூ.36.72 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் அசையும் சொத்து மதிப்பு மொத்தம் ரூ.30.47 கோடி உயர்ந்துள்ளது. இதுபோன்று அசையா சொத்து மதிப்பு கடந்த 2016ம் ஆண்டில் ரூ.2.75 கோடியும், 2021ல் ரூ.23.57 கோடியாக அதிகரித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் அமைச்சர் விஜயபாஸ்கரின் அசையா சொத்து மதிப்பு ரூ.20.82 கோடியாக உயர்ந்துள்ளது. இதேபோல் கடன் அளவு ரூ.6,80,10,860 ஆகவும், சொத்தின் மொத்த மதிப்பு ரூ.51,30,72,997 ஆகவும் உள்ளது என்பது தெரியவந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் அமைச்சர் விஜேபாஸ்கரின் சொத்து மதிப்பு 6.5 மடங்கு அதிகரித்து உள்ளது என்பது வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையாவின் மொத்த சொத்து ரூ.246.76 கோடி உள்ளன. கடந்த 15ம் தேதி வரை தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் சொத்து மதிப்பில் முதலிடத்தை அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.