உறுதியானது தளபதி 66 கூட்டணி… உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்..!!
தளபதி 66 படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயங்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் எந்த இயக்குனருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்று கேள்விக்கு பல இயக்குனர்கள் தளபதி 66 படத்தை இயக்குவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது தளபதி 66 படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பது கிட்டத்தட்ட உறுதியானதாக தகவல்கள் வெளியானது. அந்த படத்தை தற்போது யார் இயக்கப்போகிறார் என்ற கேள்வி பரவி வந்த நிலையில், ஒரு பக்கம் அட்லீ என்றும் மற்றோரு பக்கம் அஜய் ஞானமுத்து என்றும் தகவல் பரவி வந்தது. ஆனால் தற்போது தளபதி 66 இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குவது உறுதியாகிவிட்டதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.