டாப் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்க வருகிறார் லெஜண்ட் சரவணன்..!!
சரவணன் அருள் நடித்து வரும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் விளம்பர படங்களில் மட்மே நடித்து வந்ததை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாவதற்கு ஒரு புதிய படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை நடிகர் அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய இயக்குனர் ஜே.டி – ஜெரி இயக்குகிறார். மேலும் படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். மேலும் இந்த படத்தில் நடிகை பாலிவுட் நடிகை ஊர்வசி அருளிற்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழுவதுமாக படத்தின் படப்பிடிப்பு நிறுத்துவைக்கப்பட்டது. படத்திற்கான ஒரு ரொமான்டிக் பாடல் மட்டும் படமாக்கப்பட்டு முடிந்துள்ள நிலையில், கடந்த மார்ச் 1 ஆம் தேதி அதிரடி சண்டைக்காட்சிகளுடன் மீண்டும் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது மணலியில் நடந்து வருகிறது அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் ஊர்வசியுடன் அருள் நடந்து வருகிறார்.
Saravana Stores’ Saravanan’s heroic film shoot is underway in Manali.
Directed by @JdJery @UrvashiRautela is Saravanan’s pair@Actor_Vivek is also a part of the film@Jharrisjayaraj @VelrajR @AntonyLRuben @moorthy_artdir @onlynikil #NikilMurukan #NM pic.twitter.com/6qvw3xQ3XE
— Rajasekar (@sekartweets) March 18, 2021