எடப்பாடியில் அதிமுக டெபாசிட் இழக்கும்…! திமுக அமோக வெற்றி பெறும்…! – சம்பத்குமார்
எடப்பாடியில் அதிமுக டெபாசிட் இழக்கும். திமுக அமோக வெற்றி பெறும்.
எடப்பாடியில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் சம்பத்குமார் அவர்கள், பிரமாண்ட ஊர்வலம் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். எடப்பாடி பேருந்து நிலையம் முதல் வட்டாட்சியர் அலுவலகம் வரை தொண்டர்களின் ஆரவாரத்துடன் திமுக வேட்பாளர் சம்பத்குமார், தேர்தல் அலுவலர் தனலிங்கத்திடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், எடப்பாடியில் அதிமுக டெபாசிட் இழக்கும் என்றும், திமுக அமோக வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார். நாங்கள் மக்களோடு இருக்கிறோம், பழனிசாமி பணத்தை நம்பி இருக்கிறார்.