#ElectionBreaking: திமுக, அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை.!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக, மதிமுக நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மதிமுக மாவட்ட துணை செயலாளர் கவின் நாகராஜ் வீட்டில் வருமான வரித்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதுபோன்று, தாராபுரம் திமுக நகர செயலாளர் கேஎஸ் தனசேகர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது.
இதனிடையே, தாராபுரம் தொகுதியில் திமுக கயல்விழி செல்வராஜை எதிர்த்து பாஜக மாநில தலைவர் எல் முருகன் போட்டியிடும் நிலையில், திமுக, மதிமுக நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இந்த வருமான வரித்துறை சோதனையில் ஒருசில ஆவணங்கள் கையாற்றியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மீதான விசாரணை அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.