#BREAKING : நத்தம் விஸ்வநாதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ? சத்யபிரதா சாகு விளக்கம்..!
நத்தம் விஸ்வநாதன் மீதான புகார் குறித்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டு உள்ளதாக சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலை தொடர்ந்து, ஒருபுறம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தற்போது வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். மறுபுறம் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் தேர்தல் பரப்புரையின் போது ஆரத்தி எடுத்தவர்களுக்கு பணம் கொடுத்ததாக நத்தம் விஸ்வநாதன் மீது வீடியோ ஆதாரத்துடன் புகார் கொடுக்கப்பட்டது. பின்னர், நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்காளருக்கு பணம் தந்த நத்தம் விஸ்வநாதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்.எஸ் பாரதி நேற்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து, பணம் கொடுத்த அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் மீதான புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன.? என கேள்வி எழுப்பியபோது நத்தம் விஸ்வநாதன் மீதான புகார் குறித்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டு உள்ளதாகவும், அந்த விளக்கத்திற்கு பிறகு இந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.