#BREAKING: பாஜக-அதிமுக தொகுதி பங்கீடு இழுபறி.. அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..!

Default Image

புதுச்சேரியில் 5 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதியில் 16 இடங்கள் என்.ஆர் காங்கிரஸ் போட்டியிட உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 தொகுதிகளில் அதிமுக, பாஜக உடன்பாடு ஏற்படுத்திக்கொள்வதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. வருகின்ற தேர்தலில் அதிமுகவிற்கு 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என பாஜக திட்டவட்டமாக உள்ளது. ஆனால் அதிமுக சார்பில் 7 தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

பாஜக வருகின்ற தேர்தலில் 11 தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதால் பாஜக -அதிமுக இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. புதுச்சேரியில் அதிமுகவில் தற்போது 4 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். தொடர்ந்து நடைபெற்ற அனைத்து பேச்சுவார்த்தையிலும் பாஜக அதிமுகவிற்கு 3 தொகுதிக்குள் மட்டுமே ஒதுக்கப்படும் என கூறிவந்த நிலையில், 5 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உப்பளம்- A. அன்பழகன்,

உருளையன்பேட்டை – ஓம் சக்தி சேகர்,

காரைக்கால் தெற்கு – K.A.Uஅசனா

முத்தியால்பேட்டை – வையாபுரி மணிகண்டன்

முதலியார் பேட்டை – A. பாஸ்கர்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்