அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க உத்தரவிட முடியாது -உயர்நீதிமன்றம் ..!

அனைத்து ரயில்களையும் வழக்கம்போல இயக்க ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூரை சார்ந்த வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், தற்போது 65% ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. முழுமையாக ரயில்கள் எப்போது இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் இதுவரை அறிவிக்கவில்லை.
ஆனால் கொரோனா குறைந்ததை தொடர்ந்து விமானபோக்குவரத்து, திரையரங்கம் மற்றும் குளிர்சாதன பேருந்துகள் முழுமையாக இயங்கும் நிலையில், மற்ற கட்டணங்களை விட மிக குறைவாக உள்ள ரயில்கள் சேவை எப்போது இயங்கும் என அறிவிக்கவில்லை இந்நிலையில், தமிழகம் முழுவதும் இயங்கும் ரயில்கள் மற்றும் சென்னையில் இயங்கக்கூடிய புறநகர் ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வேவிற்கு உத்தரவு விட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி அனைத்து ரயில்களையும் வழக்கம்போல இயக்க ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட முடியாது. கொரோனா அச்சுறுத்தல் உள்ளதால் ரயில்களை வழக்கம்போல இயக்க உத்தரவிட இயலாது. கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கருத்து தெரிவித்தனர்.
தற்போதைய கொரோனா சூழலில் நீதிமன்றங்களை திறக்கும் முடிவை கூட திரும்ப பெற்றுள்ளோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025