2018 காமன்வெல்த் போட்டி:காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நிறைவு விழா படு மோசம் எதிரொலி!தலைவர் வருத்தம்
மோசமாக காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நிறைவு விழா இருந்தது என விமர்சிக்கப்பட்ட நிலையில், இதற்காக அதன் தலைவர் வருத்தம் தெரிவித்துக் கொண்டுள்ளார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நிறைவு விழா ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
இதில் தடகள வீரர்கள் அனைவரும் வெளிச்சம் இல்லாத பகுதியில் நிறுத்தப்பட்டதால் தொலைக்காட்சிகளால் அவர்களை காண்பிக்க முடியவில்லை. மேலும் அனைவருக்கும் அதிக நேரம் பேச ஒதுக்கப்பட்டதும் பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காமன்வெல்த் விளையாட்டு தலைவர் ((Peter Beattie)) பீட்டர் பேட்டி, தவறு செய்து விட்டதாக கூறி வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.