இந்திய தூதரக அலுவலகம் அருகே நேபாளத்தில் குண்டுவெடிப்பு!சக்தி குறைந்த வெடிகுண்டு என்பதால், யாருக்கும் காயம் இல்லை!
இந்திய தூதரகத்தின் முகாம் அலுவலகம் அருகே நேபாளத்தில், சக்தி குறைந்த குண்டுவெடித்தது. நேபாளத் தலைநகர் காத்மாண்டில் இந்திய தூதரகம் அமைந்துள்ளது. அதற்கான முகாம் அலுவலகம், இந்திய எல்லையை ஒட்டியுள்ள பிராத்நகரில் ((Biratnagar)) செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் அருகே வெடிகுண்டு ஒன்று இன்று காலை வெடித்துள்ளது. மிகவும் சக்தி குறைந்த வெடிகுண்டு என்பதால், யாருக்கும் காயம் இல்லை எனக் கூறப்படும் நிலையில், இந்திய தூதரக அதிகாரிகள் பாதுகாப்புடன் இருப்பதாக நேபாள காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், குண்டுவெடிப்பை நிகழ்த்திய நபர்கள் குறித்த விசாரணையை தொடங்கியுள்ளதாக நேபாள அரசு கூறியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.