உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்துவது சாத்தியமில்லை!அவகாசம் தேவை,மாநில தேர்தல் ஆணையம்!

Default Image

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ,வார்டுகள் மறுவரையறைச் செய்ய கால அவகாசம் தேவைப்படுவதால் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்துவது சாத்தியமில்லை என மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில் உள்ளாட்சி பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலர்களின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டதன் மூலம்  உள்ளாட்சித் தேர்தலை  நடத்தும் விருப்பம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு இல்லை என்பது தெரியவருவதாகக்
குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் கே.கே.ரமேஷ் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் செல்வம்,பஷீர் அகமது அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழக மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் ராஜசேகர் பதில்மனு தாக்கல் செய்தார்.

அதில் வார்டு மறுவரையறை தொடர்பாக குழு அமைத்து பணிகள் நடந்து வரும் வேலையில் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என மனுதாரர் கோருவதை ஏற்பது இயலாத காரியம் என கூறப்பட்டது.

இதையடுத்து  உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அவ்வழக்கு குறித்து கூடுதல் விவரங்களை தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 20 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்