சிவன் கோவிலை இடித்துவிட்டு தான் ஷாஜஹான் தாஜ் மஹாலை கட்டியுள்ளார் – பாஜக எம்.எல்.ஏ சுரேந்தர் சிங்
உலகப் புகழ்பெற்ற தாஜ் மஹால், ராம் மஹால் என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று உத்தர பிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் தாஜ்மஹால், முகலாயப் பேரரசர் ஷாஜஹான் அவர்களால் கட்டப்பட்டது. இது காதலின் சின்னம் என்று பலராலும் அழைக்கப்படுகிறது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் நினைவாக கட்டினார். இந்த தாஜ்மஹாலை காண பல இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில உத்தர பிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங், உலகப் புகழ்பெற்ற தாஜ் மஹால், ராம் மஹால் என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், தாஜ்மஹால் இருந்த இடத்தில் முன்பு சிவன் கோவில்கள் இருந்ததாகவும், சிவன் கோவிலை இடித்துவிட்டு தான் ஷாஜஹான் தாஜ் மஹாலை கட்டியதாகவும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக, இந்தியாவில் முகலாய மன்னர்களால் கட்டப்பட்டிருக்கும் பல வரலாற்று சின்னங்கள், சாலைகள் ஆகியவற்றின் பெயர்களை மாற்ற வேண்டும் என்று அவர் ஏற்கனவே அவர் சர்ச்சையான கோரிக்கையை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.