கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் 2-வது பட்டியல் வெளியீடு !
பாஜக நேற்று கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2-வது பட்டியலை வெளியிட்டது.
பாஜக கடந்த 8-ம் தேதி முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா உள்ளிட்ட 72 பேர் இதில் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் 82 வேட்பாளர்கள் கொண்ட 2-வது பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இதில் கடந்த தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட சோமசேகர ரெட்டி, பெல்லாரி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுரங்க முறைகேட்டில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் சகோதரரான இவருக்கு பாஜக மீண்டும் சீட் வழங்கியிருப்பது கட்சியினருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகன், குமார் பங்காரப்பா சூரப் தொகுதியிலும், முன்னாள் அமைச்சர் கட்டசுப்பிரமணிய நாயுடு தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிவாஜி நகர் தொகுதியிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.