#ELECTIONBREAKING: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்!
முதலமைச்சர் எடப்பாடி தொகுதியில் 7-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து, தற்போது வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதனால், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார். எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வேட்புமனுவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.
1989-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக எடப்பாடி தொகுதியில் பழனிச்சாமி போட்டியிட்டார். 6 முறை எடப்பாடி தொகுதியில் முதல்வர் போட்டியிட்டு 4 முறை வெற்றியும், 2 முறை தோல்வியும் பெற்றுள்ளார். 1977-முதல் அதிமுக, பாமகவே மாறி மாறி எடப்பாடி தொகுதியில் வெற்றிபெற்று வருகின்றனர். 1991, 2011, 2016 ஆகிய தேர்தல்களில் வெற்றியும், 2006, 1996 ஆகிய தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளார்.
1989-ல் எடப்பாடி தொகுதியில் ஜெயலலிதா அணியில் சேவல் சின்னத்தில் வெற்றி பெற்றிருந்தார். கடந்த 2016-ஆம் ஆண்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 42,022 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.