திடீரென்று பல்டி அடித்த து.முதல்வர் பன்னீர்செல்வம்! ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது நேரில் பார்க்கவில்லை!
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் உயிரோடு இருந்தபோது அவரை தாம் நேரில் பார்க்கவில்லை என கூறியுள்ளார்.
கூட்டுறவு தணிக்கை அலுவலர்களுக்கு மடிக்கணினி வழங்குதல் மற்றும் கருவூலம், கணக்குத் துறையில் ஒய்வூபெற்றவர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் விழா சென்னை நந்தனத்தில் உள்ள கால்நடை மருத்துவ வளாகத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மடிக் கணினி மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்தியில் தங்கள் கூட்டணி ஆட்சி நடைபெற்ற காலங்களில் தமிழக மக்களுக்கு உதவும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக காங்கிரஸ் கட்சிகள் தற்போது காவிரிக்காக போராடுவதாகக் கூறுவது ஏற்புடையதல்ல எனத் தெரிவித்தார்.
அரசியல் லாபங்களுக்காக இந்த போராட்டங்கள் நடைபெறுவதாகவும் அவர் விமர்சித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் உயிரோடு இருந்தபோது அவரை தான் நேரில் பார்க்கவில்லை என்றும் அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.