#BREAKING: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கார் மீது மர்ம நபர் தாக்குதல்.!
காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருந்த பொழுது மர்ம நபர் தாக்குதல்.
காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு திரும்பிய பொழுது, அவர் சென்ற காரை தாக்க முயற்சித்துள்ளார். பின்னர் கமல்ஹாசனின் கார் காந்தி சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மர்ம நபர் காரை தாக்க முற்பட்டுள்ளார். இதில் முன்பக்க கார் கண்ணாடி உடைந்தது. இதனை கண்ட கட்சி தொண்டர்கள் அந்த மர்ம நபரை தாக்கினர். இதனால் காயமடைந்த அந்த நபர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.