#Election Breaking: அமமுக – தேமுதிக இடையே மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை?
அமமுக – தேமுதிக இடையே மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியதாகவும், தேமுதிகவிற்கு 50 முதல் 55 இடங்கள் வரை ஒதுக்க முன்வந்திருப்பதாக தகவல்கள் வெளியானது.
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியதை தொடர்ந்து அமமுக – தேமுதிக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதனால் விரைவில் அமமுக- தேமுதிகவுடன் கூட்டணி உறுதியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த பேச்சுவார்த்தையை நிறுத்தி, தனித்து போட்டியிட தேமுதிக முடிவு செய்துள்ளது.
இதனைதொடர்ந்து வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனித்து போட்டியிட பலரும் மறுப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமமுக – தேமுதிக இடையே மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் தேமுதிகவுக்கு 50 முதல் 55 தொகுதிகள் வரை ஒதுக்க அமமுக முன்வந்திருப்பதாகவும், தேமுதிக விருப்பம் தெரிவித்துள்ள 30 முதல் 35 தொகுதிகள் ஒதுக்க அமமுக தயாராகவுள்ளதாகவும், இன்று மாலை அல்லது நாளை இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியானது.