IPL 2018:நரைன்,குல்தீப் சுழலில் சிக்கிய டெல்லி அணி படுதோல்வி!கொல்கத்தா அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!மேக்ஸ்வெல்,பண்ட் அதிரடி வீண் !
ஐபிஎல் 11-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 13-வது ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.டெல்லி டேர்டெவில்ஸ் அணி-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதியது.
இதில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் கம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள்:தினேஷ்கார்த்திக்,உத்தப்பா,லின்,ரானா,நரைன்,ரஸ்ஸல்,கில்,மவி,குறேன்,சாவ்லா,குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றனர்.
டெல்லி டேர்டெவில்ஸ் அணி வீரர்கள்: கம்பீர் (கேப்டன்),ஜேசன் ராய,பண்ட்,மேக்ஸ்வெல்,ஸ்ரேயாஸ் அய்யர்,விஜய் சங்கர்,மோரிஸ்,டேவாடியா,நதீம்,முகமது சமி,போல்ட் ஆகியோர் இடம் பெற்றனர்.
இதனையடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரின் முடிவில் 9 விக்கெட்டுகளுக்கு 200 ரன்கள் எடுத்தது.கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ரானா(59), ரஸ்ஸல் (41),உத்தப்பா (35),லின் (31),கேப்டன் கார்த்திக் (19) ரன்களும் அடித்தனர்.
டெல்லி அணியின் பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட்,மோரிஸ் தலா இரண்டு விக்கெட்டுகளை கைபற்றினார்.கடைசி ஓவரில் டெல்லி அணியின் பந்து வீச்சாளர் திவாட்டியா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி சீட்டுக்கட்டு போல் விக்கெட்டுகள் சரிந்தது.அந்த அணியில் அதிக பட்சமாக மேக்ஸ்வெல்(47),பண்ட்(43) ரன்கள் அடித்தனர்.14.2 ஓவர்களில் டெல்லி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கொல்கத்தா பந்துவீச்சில் சுனில் நரைன் ,குல்தீப் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து கொல்கத்தா அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.