சூர்யா 40 : சூர்யா எப்போது படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்..? லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!!

சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சூர்யா வருகின்ற 15 ஆம் தேதி முதல் இணைவார்.
நடிகர் சூர்யா சூரரைப்போற்று வெற்றியை தொடர்ந்து அடுத்தாக தனது 40 வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துவருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கான பூஜை கடந்த மாதம் நடந்தது. இந்த நிலையில் நடிகர் சூர்யா இந்த படத்தில் இன்னும் இணையவில்லை ஏனெனில் கடந்த பிப்ரவரி 4-ம் தேதி சூர்யாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் அவரே அறிவித்திருந்தார். அதன் பின் அதிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய பின்னர் திறப்பு விழா ஒன்றில் முதல் முறையாக கலந்து கொண்டார் அதற்கான வீடியோவும் சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது.
இதனை தொடர்ந்து தற்போது இந்த சூர்யா 40 படத்தில் நடிகர் சூர்யா எப்போது இணைவார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆம், நடிகர் சூர்யா வருகின்ற 15 ஆம் தேதி முதல் சூர்யா 40 படத்தில் இணையவுள்ளார். இதனால் தற்போது சசூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள்.