வலிமை படத்தின் ரிலீஸ் தேதி குறித்த சூப்பர் அப்டேட்.!!

அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆவாது உறுதியாகியுள்ளது.
நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது வலிமை படத்தின் டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், கிளைமாக்ஸ் காட்சிக்காக விரைவில் தல அஜித் வெளிநாடு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
மேலும் படத்தின் மோஷன் போஸ்டர் ரெடியாகி விட்டதாகவும் கூறப்பட்டது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் டைட்டிலை தவிர இதுவரை வலிமை படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாத காரணத்தால் தல ரசிகர்கள் அப்டேட் எப்போது என்று கேட்டு வருகின்றனர்.விரைவில் வலிமை அப்டேட் வெளிவரும் என்று காத்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு தல அஜித்தின் புகைப்படங்களும் ,வலிமை ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் தான் மகிழ்ச்சியை அளிக்கிறது.
இந்த நிலையில் தற்போது தல ரசிகர்களுக்கு வலிமை படத்திலிருந்து புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது, ஆம் வலிமை படத்தை வருகின்ற ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி ரிலீஸ் செய்வது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025