ஆய்வில் அதிர்ச்சி தகவல்!சிந்து சமவெளி நாகரிகம் 900 ஆண்டு வறட்சியால் அழிவு !
கோரக்பூர் IIT மாணவர்களின் ஆய்வு முடிவில்,சிந்து சமவெளி நாகரிகம் தொள்ளாயிரம் ஆண்டு வறட்சியாலேயே அழிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் ஆண்டுகள் மழைப் பொழிவு நிலவரம் குறித்து நிலவியல் மற்றும் புவி இயற்பியல் மாணவர்கள் ஆய்வுமேற்கொண்டனர்.
4,350 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு தொடர்ந்து வறட்சி நிலவியதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் மழைப்பொழிவு சிறப்பாக இருந்த இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயரத் தொடங்கியதாகவும், கங்கை மற்றும் யமுனை பள்ளத் தாக்குகள், கிழக்கு மற்றும் மத்திய உத்தரப்பிரதேசம், பீஹார், மேற்குவங்கம், மத்தியப் பிரதேசம், தெற்கு குஜராத் உள்ளிட்ட பகுதிகளுக்கு இடம் பெயர்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.