கிடுகிடுவென அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை…. சவரனுக்கு ரூ.400 உயர்வு..!!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.400உயர்ந்து ரூ.33,840-க்கு விற்பனை, கிராமிற்கு ரூ.50 உயர்ந்து ரூ.4,230-க்கு விற்பனை.
பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை கடந்த சில நாட்களாவே குறைந்து வருவதால் மக்கள் உற்சாகமாக தங்கத்தை வாங்கி வந்தனர், ஆனால் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.
அந்த வகையில், இன்றயை நிலவரப்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.400உயர்ந்து ரூ.33,840-க்கு விற்பனை, கிராமிற்கு ரூ.50 உயர்ந்து ரூ.4,230-க்கு விற்பனை. அதைபோல் வெள்ளி விலை கிராமிற்கு ரூ. 70 காசுகள் அதிகரித்து ரூ.71.40- க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.71,400க்கும் விற்பனையாகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025