இடஒதுக்கீட்டால் நாட்டுக்குத் தீங்கே விளையும்!பாஜக அமைச்சர் கோபால் பார்கவா சர்ச்சை கருத்து !
பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், இடஒதுக்கீட்டால் நாட்டுக்குத் தீங்கே விளையும் என தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் கூட்டுறவு மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் கோபால் பார்கவா, 40விழுக்காடு மதிப்பெண் பெற்ற ஒருவர் இட ஒதுக்கீட்டின் பயனால், 90விழுக்காடு மதிப்பெண் பெற்ற ஒருவரை முந்திச் செல்வது இயற்கைக்கு எதிரானது எனத் தெரிவித்தார். தொலைநோக்கில் பார்த்தால் இட ஒதுக்கீட்டால் நாட்டுக்குத் தீங்கே விளையும் என்றம் அவர் குறிப்பிட்டார். இந்தப் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்துத் தான் பேசியதை ஊடகங்கள் திரித்துக் கூறிவிட்டதாக அமைச்சர் கோபால் பார்கவா விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.