தனியார் நிறுவன ஊழியர்களின் சம்பளம் ஜி.எஸ்.டி.-யின் தாக்கத்தால் கணிசமான அளவு குறைய வாய்ப்பு!
ஊழியர்களின் ஊதிய தொகுப்பில் ஜி.எஸ்.டி. காரணமாக முக்கிய மாற்றங்களை நிறுவனங்கள் செய்யும் என்பதால், சம்பளத்தில் கணிசமான அளவுக்கு மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வழங்கும் வீட்டு வாடகை, தொலைபேசி கட்டணம், சுகாதாரக் காப்பீடு உள்ளிட்ட படிகள் குறிப்பிட்ட அளவை விட அதிகரிக்கும்போது, அதற்கு ஜி.எஸ்.டி. வரியை செலுத்த வேண்டும் என கூறப்படுகிறது. இதனால், தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வழங்கும் சலுகைகளை குறைத்து, ஊதியத்தை புதிதாக வரையறுக்க வேண்டியிருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜி.எஸ்.டி.யின் தாக்கத்தால், ஏற்படும் இந்த மாற்றங்களால், ஊழியர்களின் ஊதியமும் கணிசமான அளவில் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.